Tuesday 8 April 2014

ஒரு மிடறு முத்தம்



நித்தமும் இடுகிறாய்
பல இடங்களில்
பல வகையான முத்தங்களை
அவசரத்திற்கு சில
ஆசுவாசத்திற்கு சில என
சில பிடிக்கவும்தான் செய்கின்றன
சில முரண்பட்டு கிடக்கின்றன
பிடிக்காவிட்டாலும் தொடர்கின்றன
எத்தனையோ இணக்கங்கள் நமக்குள்
ஒவ்வொரு நாளும் நானே தேர்வு செய்து கொள்கிறேன்
எனக்கு விருப்பப்பட்ட ஒரு முத்தத்தை
எதுவுமே இயல்பானதாய் இல்லை
முதன்முதலில் நீ முத்தமிட்டபோது
உனக்குள் காதலையும்
எனக்குள் வெட்கத்தையும் ஊற்றிய
அந்த ஒரு மிடறு முத்தத்தைப் போல

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.